மோகன் பகவத் எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்த அவர், தமிழக மண் வேறு, பீகார் மண் வேறு என தெரிவித்தார். தமிழ்நாட்டு மக்கள் எழுத்தறிவு மிக்கவர்கள் என்பதை ஆர்.எஸ்.எஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் மீது அக்கறை இல்லாத, தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படுகிற பிஜேபியோடு கூட்டணி வைத்திருப்பதால், 1996 ஆம் ஆண்டு ஏற்பட்ட தேர்தல் முடிவு தான் அதிமுகவுக்கு கிடைக்கும் என்றும் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
























