கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக் கழகம் அமைப்பதற்கான மசோதா மீது ஒப்புதல் வழங்கும்படி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு-வுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த கடிதத்தை திமுக எம்.பி.,டி.ஆர்.பாலு தலைமையில், அதன் கூட்டணி கட்சி எம்.பி-கள் குடியரசுத் தலைவர் மாளிகையில் ஒப்படைத்தனர். கடந்த ஏப்ரல் 28-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா மீது ஒப்புதல் வழங்காமல், அதனை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிவைத்துள்ளார்.
வேண்டுமென்றே அவர்கள் மசோதாவை அலட்சியப்படுத்துவதாகவும், இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடுவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும், டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
























