10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில். டி20 உலகக் கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு குழு தலைவர் அஜீத் அகர்கர் தலைமையிலான குழுவினர் அறிவித்துள்ளனர். கேப்டனாக சூர்யகுமார் யாதவும், துணை கேப்டனாக அக்சர் பட்டேலும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷண், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷிப் சிங், குல்திப் யாதவ் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி20 தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்ட சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


























