ஒவ்வொரு நாளும் வித்தியாசமான திருட்டுகளை நாம் கேள்வி பட்டு வருகிறோம். திருடிவிட்டு ஆம்ப்லேட் போட்டு சாப்பிடுவது, வீட்டில் ஒண்ணுமில்லை என லெட்டர் எழுதி வைப்பது போன்ற வினோத்திருட்டுகளின் வரிசையில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் செங்கலை வைத்துவிட்டு நூதன முறையில் டயர்களை திருடி சென்றுள்ளனர்.
மதுரை பைபாஸ் சாலை துரைசாமி நகரில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரில் செங்கலை வைத்துவிட்டு டயர்களை மட்டும் கழற்றி சென்றுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர்,அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்களை ஆய்வு செய்து டயர் திருடர்களை தேடிவருகின்றனர்.

























