தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 43 ஆயிரத்து 844 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
இரண்டு நாள் பயணமாக கோவை சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின். சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் “டிஎன் ரைஸிங்” முதலீட்டாளர்கள் மாநாடு- 2025ல் முதலமைச்சர் கலந்துகொண்டார். அவரது முன்னிலையில், ஒரு லட்சத்து 709 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் 43 ஆயிரத்து 844 கோடி முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 158 தொழில் நிறுவனங்கள், தமிழக அரசுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் பறிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த மாநாட்டில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் பல்வேறு முன்னனி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

























