திருவள்ளூர் மாவட்டத்திற்கு, மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோர கிராமங்களான கிருஷ்ணாபுரம், ஆட்ரம்பாக்கம், ஒதப்பை, நெய்வேலி, எறையூர், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் ஆற்றின் அருகே செல்லவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆற்றில் இறங்கி மீன்பிடிக்க கூடாது என்றும், மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

























