மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு விசாரணையை
மத்திய தடை அறிவியல் ஆய்வு அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் தற்காலிக ஊழியர் அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக மதுரை அமர்வில் பல வழக்குகள் தாக்கலாகின. அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு 50 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள் மீதுக் கொலை வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அஜித் குமாரின்: குடும்பத்தினரிடம் பேரம் பேசிய அரசியல் பிரமுகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை அமர்வில் வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்ளிட்ட பலர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்ப வழக்கறிஞர், ஹைதராபாத்தில் இருந்து மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைத்துள்ளது. ஆனால், டெல்லிக்கு அனுப்பப்பட்ட மத்திய தடய அறிவியல் ஆய்வக அறிக்கை கிடைக்கவில்லை. எனவே கால அவகாசம் வழங்க வேண்டும் என முறையிட்டனர்.
அப்பொழுது மனுதாரர்கள் வழக்கறிஞர்கள் தரப்பில், இரண்டு வழக்குகளிலும் இறுதி குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், தற்பொழுது வரை தாக்கல் செய்யவில்லை. எனவே, கால அவகாசம் கேட்பது ஏற்புடையதல்ல என வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள்,ஏற்கனவே ஆறு வாரம் கால அவகாசம் வழங்கியிருந்தோம். மேலும் அவகாசம் கேட்பது ஏற்புடையது அல்ல. எனவே, வழக்கு தொடர்பாக, செல்போன் பொருட்களை ஆய்வு செய்ய டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வக ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அறிக்கை கிடைக்கவில்லை.
எனவே, இந்த வழக்கு தொடர்பான செல்போன் அறிக்கையை டெல்லியில் உள்ள மத்திய தடய அறிவியல் ஆய்வகம் ,3 வாரத்தில் வழங்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்
ஆய்வக அறிக்கை வழங்கப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சிபிஐ பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 27/11/ஒத்திவைத்து உத்தரவிட்டனர்

























