ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக அமைதி, பாதுகாப்பையும் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்த பணியாறுகிறது. மேலும் இது உலகப் பாரம்பரியத் தளங்களையும் அறிவித்து வருகிறது.
இந்நிலையில் யுனெஸ்கோவின் 20வது கலாச்சார பாரம்பரிய அமர்வு டெல்லி செங்கோட்டையில் நேற்றும் இன்றும் நடைபெறுகிறது. இதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் கலந்துகொள்கின்றனர். கலாச்சார பாரம்பரியங்களை அங்கீகரித்து, அவற்றை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த விவாதங்கள் இந்த அமர்வில் நடைபெற்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக் வலைதளப் பதிவில் யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய அமர்வு இந்தியாவில் நடைபெறுவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்று தெரிவித்துள்ளார்.


























