டில்லி செங்கோட்டை குண்டுவெடிப்புக்கு காரணமானவர்களுக்கு கிடைக்கப் போகும் தண்டனை, இந்தியாவில் மீண்டும் இதுபோன்ற தாக்குதலை யாரும் நடத்தத் துணியக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்தும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பள்ளி ஒன்றில் நடந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக பேசிய அவர், இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கும் எவரும் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.
டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்குவதை உறுதி செய்வதற்கான பிரதமர் மோடியின் உறுதிப்பாடு முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடாது என அஞ்சும் அளவிற்கு, குற்றவாளிகளுக்கு கடுமையான வழங்கப்படும் என்றும், அமித்ஷா தெரிவித்தார்.


























