திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ஆம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 3-ஆம் தேதி மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும். இதனைக் காண 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் சேகர் பாபு அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தீபத் திருவிழாவுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பேருந்து வசதிகள், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

























