ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு 480 ரூபாய் குறைந்திருக்கிறது. ஒரு சவரன் 94 ஆயிரத்து 720 ரூபாயாக இருக்கிறது.
அண்மைக் காலமாக ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு, 5 ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்தது. இந்நிலையில், இன்று 480 ரூபாய் குறைந்திருக்கிறது.
சென்னையில் ஒரு கிராம் தங்கம், 11 ஆயிரத்து 840 ரூபாயாகவும், ஒரு சவரன் 94 ஆயிரத்து 720 ரூபாயாகவும் உள்ளது. இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் குறைந்திருக்கிறது. வெள்ளி ஒரு கிராம் 180 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
























