சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்பட்டுள்ளது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிப்பன் வெட்டித் திறந்துவைத்தார். அங்கிருந்து இளம் செஸ் வீரர், வீராங்கனைகளுடன் செஸ் விளையாடி, கைகொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து புதிததாக மேம்படுத்தப்பட்டுள்ள ரோலர் ஸ்கேட்டிங் மையத்தையும் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், ரோலர் ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளவர்களையும் அவர் பார்வையிட்டு மகிழ்ந்தார்.
பின்னர், இதேபோன்று புதுப்பிக்கப்பட்ட பாரா பேட்மிண்டன் மையத்தையும் துணை முதலமைச்சர் திறந்துவைத்தார். அப்போது, மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிய உதயநிதி ஸ்டாலின், வீரர், வீராங்கனைகளுடன் கை குலுக்கினார்.

























