இந்தியா, ரஷ்யா இடையே 2030-ஆம் ஆண்டு வரை பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
உக்ரைன் போரை நிறுத்தும் வரை இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது என அமெரிக்கா வலியுறுத்தி வரும் நிலையில் ரஷ்ய அதிபர், விளாடிமிர் புதின் இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். காலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியும், புதினும் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இரு நாடுகளிடையே 2030-ஆம் ஆண்டு வரை பொருளாதார ஒத்துழைப்புககான ஒப்பந்தம் கையெழுத்தானது. தீவிரவாதத்துக்கு எதிராக தோளோடு தோள் நிற்க இரு தலைவர்களும் உறுதி தெரிவித்தனர். ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ரஷ்யாவில் இருந்து இந்தியா வரும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள் இலவச சுற்றுலா விசாவும், இலவச குழு சுற்றுலா விசாவும் வழங்கப்படும் என்று பிதமர் மோடி தெரிவித்தார். இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது£கவும் அவர் கூறினார்.


























