உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி பிற மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வருபவர்களிடம் உள்ளூர் கைடுகள் பல வகைகளில் அவர்களிடமிருந்து பணத்தை பிரிக்கின்றனர். அந்தவகையில், சிறப்பு தரிசனம் வாங்கித் தருவதாக ஆந்திர பக்தர்களிடம் தலா 250 ரூபாய் வசூலித்து ஏமாற்றிய போலி கைடுகள் சிக்கியுள்ளனர்.
ஜவுளிக்கடை ஊழியர் உட்பட இருவர் இந்த நூதன மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது போன்ற கும்பல்கள் மீது நடவடிக்கை எடுக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

























