டெல்லியில் உள்ள தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டார்.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை, கிறிஸ்துமஸ் பண்டிகையாக, கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். இதையொட்டி, தேவாலயங்களுக்கு குடும்பத்தோடு சென்று, அவர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த சூழலில், டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில், நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில், பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கடந்த 2023-ஆம் ஆண்டு ஈஸ்டர் திருநாளின்போதும், இதே தேவாலயத்தில் பிரதமர் நரேந்திரமோடி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

























