கோவையில் நடைபெற்ற மலர்கள் தின விழா-பல்வேறு மலர்கள் வடிவில் ஆடை அணிந்து இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி மழலை குழந்தைகள் விழிப்புணர்வு..
குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் மலர்கள் தின விழா கொண்டாடபடுகிறது..
இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டர் மில் பகுதியில் உள்ள வி.சி.எஸ்.எம்.பள்ளியில் நடைபெற்ற மலர்கள் தின விழாவில்,பள்ளியில் பயிலும் மழலை தாங்களே தயாரித்த மலர்கள் வடிவிலான ஆடைகளை அணிந்து அணிவகுப்பு நடத்தினர்..
இதே போல மாணவர்கள் பூக்களைக் கொண்டு அழகான வண்ண வடிவிலான கோலங்கள்,இந்திய வரைபடங்கள்,பழங்கள்,பறவைகள் போன்றவற்றை உருவாக்கி வியக்க வைத்தனர்..
இதில் ,மலர்கள் வடிவிலான ஆடை அணிந்த குழந்தைகள் இந்திய வரைபடத்தில் நின்றபடி இந்திய ஒற்றுமையை வலியுறுத்தினர்.

























