வங்க தேசத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தை தொடர்ந்து, கொல்கத்தாவில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதால், மக்கள் அச்சம் அடைந்தனர்.
வங்காள தேச தலைநகர் டாக்கா அருகே இன்று காலை 10 மணியளவில், நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5 புள்ளி 7 அலகுகளாக பதிவான நில நடுக்கம், புவியின் மேற்பரப்பில் இருந்து, 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிகிறது.
நில நடுக்கம் காரணமாக, இந்தியாவின் கொல்கத்தா நகரில் நில அதிர்வுகள் உணரப்பட்டது. கொல்கத்தா மட்டுமல்லாது, கவுகாத்தி, அகர்தலா, ஷில்லாங் நகரங்களிலும் லேசான நில அதிர்வு பதிவாகி உள்ளது.
கொல்கத்தாவில் நில அதிர்வு ஏற்பட்டதும், தனியார் ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அச்சம் அடைந்து வெளியேறி, தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் காரணமாக, இந்தியாவில் இதுவரை யாருக்கும் எந்தவித காயங்களும், பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.


























