தமிழகத்தை போன்று புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிப்பதாக த.வெ.க தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை போன்று, புதுவை ஆட்சியாளர்கள் கிடையாது எனக் கூறிய விஜய், மாற்றுக்கட்சி நிகழ்ச்சி என்றாலும், சிறப்பான பாதுகாப்பை அளித்த காவல்துறைக்கும், புதுச்சேரி முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் விஜய் கூறினார்.
பிஜேபி கூட்டணியில் இருந்த போதும், தமிழகத்தை போன்று புதுச்சேரி அரசையும் மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய அவர், மாநில அந்தஸ்து கோரி பல முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றபட்டபோதும், அதை கண்டுகொள்ளவில்லை என்றும் விமர்சித்தார். புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய விஜய், படகுகளையும் பறிமுதல் செய்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

























