அமமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 5-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் என்று, கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம், கழகத் தலைவர் கோபால் தலைமையில், ஜனவரி 5-ஆம் தேதி, தஞ்சாவூர் மகாராஜா மகாலில், காலை 9 மணிக்கு நடைபெறும்.
அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், தங்களுக்குரிய அழைப்பிதழ்களுடன் பங்கேற்குமாறு, டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில், அமமுக யாருடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என, தகவல் வெளியாகி இருக்கிறது.

























