சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒழிக்க, அந்த நாட்டின் ராணுவத்துடன், அமெரிக்க படைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனிடையே, சிரியாவின் பெல்யரா நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவில் 70-க்கும் மேற்பட்ட இடங்களில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க விமானப்படை மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் எத்தனை ஐ.எஸ். பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.


























